பைசர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்கள் ஓராண்டு காலம் பாதுகாப்பாக இருக்கலாம் என அதன் முதன்மை நிர்வாகி தெரிவித்துள்ளார்.
பைசர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்கள் ஓராண்டு காலம் பாதுகாப்பாக இருக்கலாம் என்று அதன் முதன்மை நிர்வாகி தெரிவித்துள்ளார். ஆனால் பைசர் பூஸ்டர் தடுப்பூசியின் செயல்திறன் தொடர்பில் மேலதிக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா நோய்த்தொற்று தொடர்பான பொதுமுடக்கத்தில் இருந்து வெளியேற, உலக நாடுகள் தடுப்பூசி திட்டங்களை முழுவீச்சில் அமுல்படுத்தி வருகின்றது.
இதில் இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்தி கொண்ட பின்பும் குறிப்பிட்ட சதவீத மக்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த நிலையில் தற்போது பூஸ்டர் தடுப்பூசி செலுத்திகொள்ள பெரும்பாலான நாடுகள் மக்களை அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் பைசர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆல்பர்ட் போர்லா தெரிவித்தபோது “பூஸ்டர் தடுப்பூசியின் காலாவதி ஓராண்டுகள் மட்டுமே ஆகும்.
ஆனால் அது தொடர்பில் மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதுமட்டுமின்றி தற்போதைய சூழலை ஆய்வு செய்கையில் வருடந்தோறும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் நிலை ஏற்படலாம். இதனையடுத்து 2-வது டோஸ் செலுத்தி கொண்ட 6 மாதங்களில் தடுப்பூசியின் செயல்திறன் குறையத் தொடங்குவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பூஸ்டர் தடுப்பூசி முழுமையாக அளிக்கப்பட்ட பின்னரே அது தொடர்பான ஆய்வுகளில் தெளிவான முடிவு கிடைக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.