இத்தனை ஆண்டுகளாக சென்னையை தங்கள் கோட்டையாக கூறிக் கொள்பவர்கள் இப்படி ஓட்டையாக வைத்திருப்பார்கள். இதை நான் எதிர்பார்க்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை முழுக்க மழைநீரால் சூழ்ந்துள்ளது. பலபகுதிகளில் மழைநீர் வீட்டுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தங்களது பாஜக அலுவலகத்திலேயே உணவு தயாரித்து வழங்கி வருகின்றனர். பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். களத்தில் இருக்கும் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் “இது மக்கள் வாழ்விடமாக அல்லது மழைக்கால ஏரியா? இத்தனை ஆண்டுகள் சென்னையை தங்கள் கோட்டையாக கூறுபவர்கள், இத்தனை ஓட்டையாக வைத்திருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலையும் அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கி வந்தேன்” என்று விமர்சனம் செய்துள்ளார்.