பிரான்ஸ் நாட்டில் டசால்ட் நிறுவனத்திடம் காங்கிரஸ் தலைமையில் கடந்த 2007-2012 ஆம் ஆண்டில் ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. இதனையடுத்து கடந்த 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சியில் டசால்ட் நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி உள்பட அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் முன்னதாகவே குற்றம் சாட்டினர்.
இதனிடையில் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் இடைத்தரகர்களுக்கு லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளது என்று இந்த நாட்டின் ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 2007-2012 ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரபேல் விமான ஒப்பந்தத்தில் இடைத்தரகர்களுக்கு லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது என்று பிரான்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது. மேலும் அதில் இதன் தொடர்பாக ஆவணங்கள் கிடைத்தும் இது குறித்து விசாரணையில் சிபிஐ தோல்வி அடைந்துவிட்டது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து பாஜக கூறியது, இந்திய தேசிய காங்கிரஸ் என்றால் ஐ நீட் கமிஷன் என்று அர்த்தம். சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் ராபர்ட் வத்ரா ஆகியவர்கள் எங்களுக்கு கமிஷன் வேண்டும் என்று கூறுகின்றனர். அதைத்தொடர்ந்து ரபேல் விவகாரத்தில் இத்தனை ஆண்டுகள் பொய்யான செய்திகளை காங்கிரஸ் பரப்பியது ஏன்? என்றும் ராகுல்காந்தி விளக்கம் அளிக்க வேண்டும். ராகுல் காந்தியின் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தான் கமிஷன் கொடுக்கப்பட்டது என்று தெரியவந்து உள்ளது. அது மட்டுமில்லாமல் இடைத்தரகர்களின் பெயர்களும் தெரியவந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.