2015ஆம் ஆண்டு பெருவெள்ளத்திற்கு பிறகு பல கோடி ரூபாய் செலவு செய்தும் நிலைமை மாறவில்லை என உயர்நீதிமன்ற அதிருப்தி தெரிவித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி,
நீங்க எல்லாம் பாத்துருகீங்க… எந்தெந்த இடத்தில் எல்லாம் தண்ணீர் வடிந்து இருக்கிறது என்று பாத்துருகீங்க. அடையாறு, கூவம், எல்லாம் எந்த அளவுக்கு தூர்வாரப்பட்டு இருக்கிறது என்று தெரியும். நவீன இயந்திரத்தின் மூலமாக தூர்வாரப்பட்டதன் விளைவு வடசென்னை பகுதியில் தாழ்வான பகுதியில் தண்ணீரே தேங்காமல் வெளியே போய் இருக்கிறது. இதை எல்லாம் இந்த அரசாங்கம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
ஏனென்றால் உயர்நீதிமன்ற நீதியரசர்களுக்கு எடுத்து சொன்னாதான் தெரியும். ஆனால் இப்போது ஆளுங்கட்சியாக இருக்கிறவர்கள் எங்கள் மீது குறை செல்ல வேண்டும் என்று திட்டமிட்டு சரியான செய்தியை நீதிமன்றத்திற்கு தெரிவித்தால் நீதியரசருக்கு புரிந்து கொள்வார்கள்.