இன்னும் ஆறு மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்ககடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்னும் ஆறு மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 11ஆம் தேதி தமிழக கடலோரப் பகுதியை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Categories