Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் சொல்லி இருக்கணும்…! அறிக்கை கொடுத்து இருக்கணும்…. எதுமே பேசல ஏன் ?

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, எங்கள் ஆட்சி காலத்தில் முல்லை பெரியாறு அணையில் தமிழக உரிமைகளை நிலைநாட்டியுள்ளோம். 145 அடியாக இருந்த போது அணையை  திறக்கவில்லையே. அப்ப அசாதாரண சூழ்நிலை இல்லை, இப்பதான் அசாதாரண சூழ்நிலை. இன்றைக்கு 139 அடி கூட வரல,  138 அடியிலே திறக்குறாங்க.

நமக்கு 2,500 கன அடி வருது. அங்க  3300 கனஅடி போயிட்டு இருக்கு. இப்போ கூட நீர்மட்டம் 139 அடியை எட்டவில்லை. இப்படி இருக்கும்போது  அமைச்சர் ஆய்வு பண்ணேன் என்று சொல்வது வெட்கமாக இல்லையா ?அதிமுக ஆட்சியில் முதலமைச்சர், கேரளா முதலமைச்சரை சந்திக்கிறார். அணையின் நீர்மட்டத்தை 152 உயர்த்த வேண்டும், எனவே அதுக்கு தடையாக இருக்கின்ற பேபி அணையை கட்டுவதற்கு  நீங்கள் வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

சுதந்திரம் பெற்ற பிறகு  மாநில வாரியாக பிரிக்கப்பட்ட பிறகு, மாநிலத்திற்கு கொடுக்கப்பட்ட உரிமைகளில் இன்னொரு மாநில அமைச்சர் தலையிட்டதாக வரலாறு உண்டா ? எந்த மாநிலத்திலாவது திறந்து உள்ளார்களா ? இன்னொரு மாநில அமைச்சர் இன்னொரு மாநிலத்திற்கு  அத்துமீறி வந்து,  இந்த மாநிலத்தின் முதலமைச்சர் உடைய அனுமதி இல்லாமல் அணையை திறந்து இருக்கிறார்கள் ?

முன்கூட்டியே கேரள அமைச்சர்கள் மதகு திறக்கிறார்கள் அப்படி என்று சொல்லி இருக்கணும்ல. முதலமைச்சர் அறிக்கை கொடுத்திருக்கணும்ல. முதலமைச்சர் அதை பத்தி பேசவே இல்லையே…. முல்லைப் பெரியாறு அணையை  பற்றி பேச வில்லை. ஏனென்றால் அவர்களுக்கு உரிமை கிடையாது என தெரிவித்தார்.

Categories

Tech |