மின்சாரம் தாக்கி ஹோட்டல் ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நல்லூர் குரும்பபட்டி பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நத்தம் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் ஓட்டலில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் குமார் ஹோட்டலில் இருக்கும் சுவிட்ச் பாக்சில் மின் ஒயரை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே குமார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.