டிடிவி தினகரன் அதிமுகவை மீட்டெடுப்போம் என்று சொன்னது குறித்த கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,
ஒரு பழமொழி உண்டு… முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுகிற கதையாக தான் இந்த கதை இருக்கும். கண்டிப்பாக இது நடக்காத விஷயம். அண்ணா திமுக பொருத்தவரை பெரிய அளவிற்கு ஒரு ஒன்றரை கோடி தொண்டர்களுடன் இன்றைக்கு வெற்றிநடை போட்டு இருக்கு, வெற்றி நடை போட்டுக் கொண்டிருப்பதை ஒரு சாதாரண தினகரன் போன்றவர்களெல்லாம் இன்றைக்கு கட்சிக்கு சம்பந்தமில்லை, கட்சிக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் சொல்லுங்க ?
இன்றைக்கு அவர்கள் அமமுக ஆரம்பித்துவிட்டார்கள். அதேபோல அம்மாவுடைய காலத்தில் அம்மாவே தினகரனை தோட்டத்து பக்கமே வராத என்று சொல்லி துரத்தி அடித்தார்கள். அப்படி தோட்டத்து பக்கமே வராதவாரு, தலையே காட்டாமல் இருந்தவர் திடீரென வந்து நான் தான் அதிமுகவை மீட்பேன் என்று சொன்னால் நான் சொல்ற அந்த பழமொழி தான் பொருந்தும். முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்ட கதை தான், ஒரு காலமும் நடக்காது என தெரிவித்தார்.