செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆகாயத்தாமரையை அகற்றுவதாக விளம்பரம்தான் வந்ததே ஒழிய… பத்திரிக்கையில் போட்டோ போட்டு, எங்கயாவது ஆகாய தாமரை அகற்றினார்களா ? பொதுவாக கொசத்தலையாறு, கூவம் நதி, அடையாறு இதெல்லாம் பிரதான மழைநீர் செல்ல கூடிய அளவிற்கு ஆறுகள்…. இந்த ஆறுகளை தூர் எடுத்து முழுமையாக மக்களுக்கு எந்தவித பாதிப்பில்லாத வகையில் செய்வதற்கு ஆகாய தாமரை அகற்றுவது மட்டுமல்லாமல் தூர்வார வேண்டும்.
ஆனால் இந்த பணி ஒருநாள் செய்துவிட்டு அதோடு மூடுவிழா பண்ணிட்டாங்க. அதனுடைய விளைவு என்ன ஆயிற்று ? ஸ்டாமான் ட்ரைன் கிளீன் பண்ணா தான் தண்ணீர் போகும், தண்ணீர் போகவில்லை என்றால் நான் சொல்ற இந்த கால்வாய்களில் நீர் விழுந்தாதான் அது கடலுக்கு போய் சேரும், ஆனா கடலுக்குப் போகாத அளவிற்கு வந்து இவர்கள் எந்தவித தூர் எடுக்காத நிலை காரணமாக இன்றைக்கு வெள்ளக்காடாக மாறியுள்ளது.
இந்த ஒரு மழைக்கே திமுக அரசு திண்டாடுகிறது, தவிக்கிறது என்று சொன்னால் இன்னும் ரெட் அலர்ட் கொடுத்திருக்கிறார்கள். இந்த மாதிரி ஒரு பெருமழைக்கு எப்படி இந்த திமுக அரசாங்கம் செயல்பட போகிறது ? நிச்சயமாக மக்களுக்கு வந்து ஒரு பெரிய அளவிற்கு ஒரு விடியாத அரசாகத்தான் திமுக அரசு இருக்கிறது என விமர்சித்தார்.