சட்ட விரோதமாக முயல்களை வேட்டையாடிய நபருக்கு வனத்துறையினர் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி வனப்பகுதியில் சட்டவிரோதமாக வன விலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனத்துறையினர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சுக்கமநாயக்கன்பட்டி பகுதியில் வலையுடன் சுற்றித்திரிந்த ஒருவரை வனத்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் பெத்தநாயக்கன்பட்டி பகுதியில் வசிக்கும் சின்னதுரை என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் சட்டவிரோதமாக முயல்களை வேட்டையாடியதும் தெரியவந்துள்ளது. இதனால் சின்னதுரையை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த ஐந்து முயல்கள், டார்ச்லைட் போன்றவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்ததோடு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.