கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி டாஸ்மாக் மதுபான கடைகளை 4 நாட்கள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலை நகர், கிரிவல பாதையை ஒட்டி உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை 4 நாட்கள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் தனியார் பார்கள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான மது விற்பனை அங்காடிகளிலும் நவம்பர் 17ஆம் தேதி முதல் 20ம் தேதி வரை நான்கு நாட்கள் மூடவும் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.