‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் அஸ்வின். இவர் சில ஆல்பம் பாடல்களிலும் நடித்திருக்கிறார். இதனையடுத்து, இவர் ” என்ன சொல்ல போகிறாய்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
விவேக் மெர்வின் இசையமைக்கும் இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இந்த டீசரை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.