தமிழகத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இன்னும் மழை தொடரும் எனவும், புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே கனமழையின் காரணமாக, ஏற்கனவே பெரம்பலூர், அரியலூர், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த நிலையில் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக நாளை கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார்.