Categories
மாநில செய்திகள்

BIG ALERT: ரெட் அலெர்ட் – சற்றுமுன் வெளியான பரபரப்பு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து கடலூர் அருகே கரையைக் கடக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாமல்லபுரம்- ஸ்ரீஹரிகோட்டா இடையே சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர் அருகே கரையை கடக்கும் என்று கூறப்பட்ட நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் சற்று வடக்கு திசையில் நகர்ந்துள்ளது. இதனால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் அதீத கனமழை இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |