Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

16 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை…. சுகாதார ஊழியர் அளித்த புகார்…. கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு….!!

அரசு மருத்துவமனையில் 16 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது குறித்து கணவர் உள்பட 6 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழபாலாமடை கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு ராஜவல்லிபுரம் பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. தற்போது அந்த இளம்பெண் குழந்தை பேறுக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. தற்போது அரசு மருத்துமனையில் உள்ள அந்த இளம்பெண் குறித்த விவரங்களை சேகரித்த போது அவர் தற்போது 16 வயது பூர்த்தி அடைந்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சுகாதார ஊழியர் முத்துலட்சுமி இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சிறுமிக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்ததும் தற்போது அவருக்கு குழந்தை பிறந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மகளிர் காவல்துறையினர் சிறுமியின் கணவர் கணேசன், தாயார் ஆயிரத்தம்மாள், சகோதரன் மணிகண்டன் மற்றும் உறவினர்களான கீழபாலாமடை பகுதியில் வசிக்கும் செல்லப்பா, லில்லி ஜெபமணி, ஆறுமுகக்கனி ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |