வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது. இது நாளை மாலை வட தமிழகம் – தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்கும்..
தென்கிழக்கு வங்கக்கடலில் 9ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது.. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தது. இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமானது வலுவடைந்துள்ளது.. புதுச்சேரிக்கு 420 கிலோ மீட்டர் கிழக்கு, தென்கிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது..
இது 11ஆம் தேதி (நாளை) மேற்கு, வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து அதிகாலை மாமல்லபுரம் கடற்கரையை நோக்கி வரும் என்று கூறப்பட்டுள்ளது.. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும், காரைக்காலுக்கும் இடையே கடலூர் அருகே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அதில் சிறிது மாற்றமாக வடக்கே நகர்ந்து மாமல்லபுரத்துக்கும், ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே சென்னை அருகே நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது..