புஷ்பா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள அனுசுயாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் இரு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. இயக்குனர் சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் . மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் மற்றும் சில பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
She is arrogance and pride personified!
Introducing @anusuyakhasba as #Dakshayani.. #PushpaTheRise #PushpaTheRiseOnDec17@alluarjun @iamRashmika @aryasukku #FahadhFaasil @Dhananjayaka @Mee_Sunil @ThisIsDSP @adityamusic @PushpaMovie pic.twitter.com/ER87UhxXLZ
— Mythri Movie Makers (@MythriOfficial) November 10, 2021
மேலும் புஷ்பா படத்தின் முதல் பாகம் வருகிற டிசம்பர் 17-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் புஷ்பா படத்தின் முக்கிய வேடத்தில் நடித்துள்ள அனுசுயாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இவர் இந்த படத்தில் தக்ஷயனி என்ற கேரக்டரில் நடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.