Categories
தேசிய செய்திகள்

சாலையில் சென்ற பைக்…. திடீர்னு துணிக்கடைக்குள்…. அதிர வைக்கும் சம்பவம்…!!!

தெலுங்கானா மாநில நாட்டிலுள்ள கம்மம் மாவட்டம் பஜார் வீதியில் பைக் ஒன்று சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த அந்த பைக் அதிவேகமாக சென்று அங்கிருந்து துணிக்கடை ஒன்றுக்குள் புகுந்தது. எதிர்பாராத விதமாக உள்ளே பைக் புகுந்ததை எதிர்பார்க்காத அங்கிருந்த ஊழியர்கள் உட்பட 3 பேர் விபத்தில் இருந்து தப்பியுள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக பைக் ஓட்டி வந்த நபரும் இந்த விபத்தில் இருந்து தப்பியுள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் விபத்துக்குள்ளான பைக்கை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்த விசாரணையில் பிரேக் பழுதானதன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து துணிக்கடைக்குள் புகுந்துள்ளது தெரியவந்துள்ளது.

Categories

Tech |