செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனிடம், அமமுக தொடங்கப்பட்டது அதிமுகவை மீட்டெடுப்பது என்பதற்காக தான். இப்போ நடக்கின்ற சூழ்நிலையை பார்க்கும்போது விரைவில் ஒரு இணைப்பு சத்தியமாக உள்ளதா என்று உங்களுக்கு தெரிகிறதா என செய்தியாளர் கேட்டதற்கு,
நானும் ஊடகங்களில் தான் பல செய்திகளை பார்க்கிறேன். எனக்கு இப்படியெல்லாம் யோசிக்க முடியுமா ? யார்யாரோ எனென்னமோ எழுதுறாங்க, அதை தவறு என்று கூறவில்லை அது அவர்களுடைய சுதந்திரம் , அதில் எத்தனை சதவீதம் உண்மை இருக்கிறது இல்லை என்பது எனக்கு சிரிப்பாக இருக்கும், நானும் ஜாலியா பார்ப்பேன். நம்மளை பற்றி இப்படி எல்லாம் தகவல் வெளியிட்டு இருக்கிறார்களே, இந்த நடவடிக்கைக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கிறது அப்படி என்று. அதனால் எனக்கு அது மாதிரியான யூகங்களுக்கு நான் பதில் சொல்வது சரியாக இருக்காது என்று நினைக்கிறேன்.
பன்னீர்செல்வம் எதையும் நிதானமாக சிந்தித்து யோசித்து பேசக்கூடியவர், எனக்கு தனிப்பட்ட முறையில் நீண்ட நாள் பழக்கத்தில் நான் சொன்னேன். அவரு கருத்து சொல்லியிருக்கிறார் என்றால் அது சரியாகத்தான் சொல்லி இருப்பார், ஒரு கட்சியில் தொண்டர்கள் விருப்பத்தை ஓட்டெடுப்பு எடுத்து நடத்தி ஏதும் பண்றது இல்லை, தலைமை கழகத்தில் நிர்வாகிகள் உட்கார்ந்து எல்லாருடைய கருத்தை அறிந்து தான் பேசுவார்கள்.
மாவட்ட செயலாளர் கூட்டம், மண்டல பொறுப்பாளரிடம் பேசுவார்கள், தலைமை கழக நிர்வாகிகள் கீழே உள்ளவர்களுடைய விருப்பத்தை தான் அவர்கள் பேசுவார்கள் அதேமாதிரி அவர்கள் சொல்லி இருக்கலாம். அதனால் அவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்று நான் அன்னைக்கே சொன்னேன் என தெரிவித்தார்.