Categories
மாநில செய்திகள்

BREAKING: HIGH ரெட் அலர்ட்….. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மத்திய வங்கக் கடலில் நேற்று புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியது.

இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கு வடக்கே நாளை கரையை கடக்கும். தற்போது சென்னைக்கு 430 கிலோமீட்டர் கிழக்கு, தென்கிழக்கு புதுச்சேரிக்கு 420 கிலோ மீட்டர், கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளது இதனால் சென்னை அருகில் இருக்கும் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் அதிக மழை பெய்யும்.

Categories

Tech |