கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி பெயர் அடிபடுது, மறுவிசாரணை நடத்துகின்றார்கள் என்ற கேள்விக்கு,
நான் அன்றைக்கே சொனேனே, ஒருத்தருக்கு மடியில் கனமில்லை என்றால், பயப்பட வேண்டிய அவசியமில்லை, பதறவேண்டிய அவசியம் இல்லை, அவ்வளவு தான். அவருக்கு மடியில் கனமில்லை என்றால் அவரு பதறவேண்டாம் என்று சொல்கிறேன். நான் இருக்கு என்று நினைப்பதற்கு நான் என்ன போலீசா ? கோர்ட்டா ? எடப்பாடி பலவீனமாக இருக்கிறார் என்று சொல்கிறேன், அரசியல் ரீதியாக…
நீங்க தான கேட்டீங்க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கினைப்பாளருக்கு கருத்து வேறுபாடு இருக்கு அப்படி என்று கேட்குறீர்கள். பலவீனமாக இருந்தால் தான அது வரும். இப்ப நாங்க தோற்ற பிறகு தான நீங்க கேட்குறீங்க… நீங்க தோற்றுவிட்டீர்களே, நீங்க மறுபடி வர முடியுமா ? என்று கேட்கிறீர்கள், வருவோம் நம்பிக்கை இருக்கு. அடுத்த தேர்தலில் நாங்கள் முயற்சி செய்வோம் என்று சொல்கிறேன். அதே மாதிரி ஒரு பின்னடைவு வரும் போது பலவீனமாக இருகிறார்களா ? அல்லது பலமாக இருக்கிறார்களா ? என்பது அவர்களுடைய ஆளுமையை பொறுத்து தான் இருக்கு என தெரிவித்தார்.