Categories
மாநில செய்திகள்

கொட்டும் மழையில் எப்படி…? இது ஒன்னும் எனக்கு புதுசு இல்ல…. மாஸ் காட்டிய முதல்வர்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நான்கு நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு முதல்வர் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில், மு க ஸ்டாலின் இன்று சென்னை தியாகராயநகரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளரை சந்தித்து பேசிய அவர், மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால், எந்த நோக்கத்தோடு எந்த கொள்கையோடு, எந்த லட்சியத்தோடு ஆட்சிக்கு வந்தோமோ அதை நிச்சயமாக பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய பகுதியில் முதலில் முக்கியத்துவம் கொடுத்து நிவாரண நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

தொடர்ந்து பணிகள் நடந்து கொண்டிருக்கிறது என்று கூறினார் .செய்தியாளர் ஒருவர் கொட்டும் மழையில் எப்படி ஆய்வு செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர், இது எனக்கு புதியது இல்லை. நான் மேயராக இருந்தபோது இதையே செய்திருக்கிறேன். சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதும் செய்திருக்கிறேன். துணை முதலமைச்சராக இருந்தபோதும் செய்திருக்கிறேன். இப்போது முதலமைச்சராக இருந்து செய்கிறேன் என்று பதிலளித்துள்ளார்.

Categories

Tech |