காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை மாலை கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்துள்ளதாவது: “சென்னை கிழக்கு தென்கிழக்கு 450 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. புதுச்சேரி கிழக்கே தென் கிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது.
இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களை நெருங்கும். இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். குறிப்பாக வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்காலுக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே புதுச்சேரிக்கு வடக்கே கரையைக் கடக்கும்” என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.