வங்கக்கடலில் மையம் கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னைக்கு கிழக்கே, தென்கிழக்கே 430 கிலோ மீட்டர் தொலைவில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமானது மையம் கொண்டுள்ளது. மேலும் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை 6 மணி அளவில் மாமல்லபுரம் கடற்கரை நோக்கி நெருங்கும். காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர பகுதிகளை நெருங்கும் என்பதனால் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக எண்ணூர், நாகை, காரைக்கால், சென்னை உள்ளிட்ட 7 துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் கனமழை பெய்யும் கூடும் என்றும், இன்றிரவு முதல் நாளை காலை வரை கனமழை பெய்யக்கூடும் என்றும், கடலூர், புதுச்சேரிக்கு அதிக கன மழை பெய்ய வாய்ப்பு குறைவு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.