Categories
உலக செய்திகள்

தடுப்பூசி திட்டத்தில் பின்னடைவு..! சிறந்த மருத்துவ அமைப்பு கொண்ட பிரபல நாடு… வெளியான பரபரப்பு தகவல்..!!

சர்வதேச அறிக்கை ஒன்று கொரோனா தடுப்பூசி திட்டத்தில் சுவிட்சர்லாந்து பின்தங்கி இருப்பதாக தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்து OECD ( Organisation for Economic Co-operation and Development ) எனப்படும் பொருளாதார கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. அந்த வகையில் OECD அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சுவிட்சர்லாந்து அதிக ஆண்டுகள் வாழ்வோரை கொண்ட நாடாக இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்நாட்டில் மருத்துவ அமைப்பு சிறந்த நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் சுவிஸ் நாட்டில் 63 % மக்கள் மட்டுமே இந்த ஆண்டு நவம்பர் மாதம் துவக்கத்தில் கொரோனா தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஆனால் இந்த கொரோனா தடுப்பூசியை மற்ற OECD நாடுகளில் 65 சதவீத மக்கள் முழுமையாக பெற்றிருகின்றனர். எனவே இந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதி தரவுகளின் படி சுவிட்சர்லாந்து OECD நாடுகளில் அதிக கொரோனா தடுப்பூசியை பெற்ற நாடுகளின் பட்டியலில் 11-ஆவது இடத்தில் இருந்தது. இதையடுத்து நவம்பர் 1-ஆம் தேதி தரவின் தடுப்பூசி குறைவாக பெற்ற நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து 15-வது இடத்திற்கு சென்றுள்ளது. இந்நிலையில் OECD அமைப்பு மருத்துவ சேவைகளில் உயர்ந்த இடத்தில் இருக்கும் சுவிட்சர்லாந்து மருத்துவ கட்டணங்களில் அதிக செலவையும் ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |