தமிழகத்தில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதினால் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள ஆறுகள் நிரம்பியதால், அதனை திறக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியது, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் திருவாரூர், மதுரை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 94 கால்நடைகள் உயிரிழந்துள்ளது.
அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஏரிகளை பகல் நேரத்தில் மட்டுமே திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே இரவு நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியை திறக்கக் கூடாது என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 33 ஆயிரம் பேர் படகுகள் பத்திரமாக கரை திரும்பியுள்ளனர். கடலோர மாவட்டங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.