Categories
உலக செய்திகள்

இது நம்ம குழந்தையே இல்ல..! மருத்துவமனை செய்த குளறுபடி… வேதனையில் வாடும் பெற்றோர்..!!

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த குழந்தை ஒன்று அவருடையது இல்லை என்று தெரியவந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த Daphna (43) என்ற பெண் நீண்ட நாட்களாக இரண்டாவது குழந்தையை பெற வேண்டும் என்ற ஆசையில் இருந்துள்ளார். ஆனால் குழந்தை கருத்தரிக்காத காரணத்தினால் Daphna செயற்கை கருவூட்டல் முறையில் கருவுற்றுள்ளார். அதன்பிறகு பத்து மாதங்கள் சுமந்து பெற்றெடுத்த அந்த குழந்தையானது அவருடைய குழந்தை இல்லை என்பது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அந்த குழந்தை வளர வளர பெற்றோருக்கு சந்தேகமும் வலுவாகி கொண்டே இருந்துள்ளது.

இந்நிலையில் Daphna-வின் கணவரான Alexander Cardinale (41) டிஎன்ஏ பரிசோதனைக்கு ஏற்பாடு செய்துள்ளார். அந்த பரிசோதனையின் முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு Daphna-ன் DNA வோ, Alexander Cardinale-வோ அந்த குழந்தையின் உடலில் இல்லை என்பதனை உறுதிப்படுத்தியுள்ளது. பின்னர் Daphna-வும் அவரது கணவரும் செயற்கை கருவூட்டல் சிகிச்சை எடுத்து கொண்ட மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

அங்கு வேறொரு பெண்ணின் வயிற்றில் அவர்களுடைய கருமுட்டை தவறுதலாக வைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து குழந்தைக்கு நான்கு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் உண்மையைக் கூறி அதனை அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டது. இருப்பினும் Daphna-வுக்கும் அவரது கணவருக்கும் குழந்தையின் இந்த பிரிவு பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இதற்கிடையே Daphna தனது மூத்த மகளான Olivia-யிடம் எவ்வாறு அது அவளது தங்கை இல்லை என்ற விஷயத்தை கூற இயலும் என்ற சோகத்தில் உள்ளாத தெரிவித்துள்ளார்.

Categories

Tech |