இஸ்லாமிய பெண் ஒருவர் பிரித்தானியாவில் இனரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி லண்டனைச் சேர்ந்த GD (21) என்ற இஸ்லாமிய பெண் London paddington-க்கு Bath Spa-விலிருந்து ரயிலில் சென்றுள்ளார். அதாவது GD தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக Bath நகருக்கு மூன்று நண்பர்களுடன் சென்று திரும்பியுள்ளார். அப்போது ரயில் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு நபரிடம் தான் இங்கு உட்காரலாமா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த நபரோ கெட்ட வார்த்தையில் GD-ஐ இனரீதியாக திட்டியுள்ளார்.
அதோடு மட்டுமில்லாமல் சக பயணிகளிடம் இவர் குண்டு வெடிப்பாளர், பயங்கரவாதி, ரயிலை வெடிக்க வைக்கலாம் என்று கூறி அந்த நபர் தன்னை காயப்படுத்தியதாக GD கூறியுள்ளார். இவ்வாறு அந்த நபர் இனரீதியாக பேசுவதைக் கண்டு வேதனையடைந்த GD நடத்துனரிடம் இது குறித்து கூறியுள்ளார். பின்னர் அந்த நபர் ரயிலில் இருந்து இறக்கி விடப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பில் அளிக்கப்பட்ட புகாரில் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.