Categories
உலக செய்திகள்

சீன ஏவுகணை சோதனையால் அதிர்ச்சி..! பிரபல நாடு முன்னெடுத்துள்ள முயற்சி… வெளியான பரபரப்பு தகவல்..!!

அமெரிக்கா அதிநவீன திறன் கொண்ட லேசர் ஆயுதங்களை உருவாக்க முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சீன நாடு ஹைபர்சோனிக் வகையை 5 மடங்கு வேகத்தில் செல்லும் அணுசக்தி திறன் மூலம் வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்தது. இதன் காரணமாக அதிர்ச்சியில் இருந்த அமெரிக்கா தங்கள் நாட்டு இராணுவத்திற்கு லேசர் ஆயுத அமைப்பினை 300 கிலோ வாட் சக்தி கொண்ட உயர் ஆற்றலுடன் உருவாக்குவதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

மேலும் அந்த லேசர் ஆயுதம் மூலம் அடுத்த தலைமுறை அச்சுறுத்தல்களை தோற்கடிக்கவும், ராணுவத்தை நவீனமயமாக்கவும் முடியும் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Categories

Tech |