தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதுமட்டுமல்லாமல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து தற்போது தாழ்வு மண்டலமாக நிலை கொண்டு உள்ளதால் கன மழை வெளுத்து வாங்குகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவிக்கலாம் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாகசேலம் மாவட்டத்தில் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவித்துள்ளார். ஏற்கனவே 9 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு,கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள நிலையில் மேலும் ஒரு மாவட்டத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.