தலைநகர் பாக்தாத்தில் ஈராக் பிரதமருக்கு ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைநகர் பாக்தாத்தில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து ஈராக் பிரதமருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஈராக்கில் தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து போராட்டங்களும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ட்ரோன் மூலம் பிரதமர் முஸ்தபா கதிமி-யின் இல்லம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
அந்த வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாவலர்கள் பலரும் பலத்த காயமடைந்ததாக கூறப்பட்டது. இருப்பினும் ஈராக் பிரதமர் நலமுடன் பாதுகாப்பாக இருப்பதாக ராணுவம் தகவல் வெளியிட்டது. ஆனால் இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் வெடிகுண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ட்ரோன் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.