கொரோனா தொற்று பாதிப்பானது செல்லப்பிராணிகளுக்கு பரவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தில் வளர்ப்பு நாய் ஒன்றிற்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வெய்பிரிட்ஜில் உள்ள விலங்குகள் மற்றும் தாவரங்கள் சுகாதார ஆய்வு குழு கடந்த 3 ஆம் தேதி மேற்கொண்ட பரிசோதனையில் அந்த வளர்ப்பு நாய்க்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து தொற்று பாதித்த அந்த நாய்க்கு வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளிக்கின்றனர். மேலும் நாய்க்கு அதன் உரிமையாளரிடம் இருந்து தான் கொரோனா தொற்று பரவியிருக்கக்கூடும் என ஆதாரங்கள் கூறுகின்றது.
குறிப்பாக நாய்களுக்கு நோய் தொற்று ஏற்படுவது என்பது அரிதான நிகழ்வாகும். மேலும் அவைகளுக்கு தொற்று இருந்தால் லேசான அறிகுறிகளை மட்டுமே காண்பிக்கும். இருப்பினும் சில நாட்களில் அது குணமடைந்து விடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதிலும் மனிதர்களிடம் இருந்து செல்லப்பிராணிகளுக்கு கொரோனா தொற்று பரவுகிறது என்பதற்கு தெளிவான ஆதாரம் இல்லை. இதனை தொடர்ந்து நாயை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவகின்றனர்.
மேலும் நாயின் நிலையில் ஏதேனும் மாற்றம் தெரிந்தால் அதன் உரிமையாளருக்கு புதிய வழிகாட்டுதல்கள் கூறப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து இங்கிலாந்தின் சுகாதார பாதுகாப்பு அமைப்பின் தொற்றுநோயியல் ஆலோசகர் டாக்டர் கேத்ரின் ரஸ்ஸல் கூறியதில் ‘ கொரோனா தொற்று பரவலானது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. தற்போது மக்களிடமிருந்து விலங்குகளுக்கு தொற்றுகிறது.
இதனால் செல்லப்பிராணிகள் வைத்திருப்போர் பொது சுகாதார அறிவுரையின் படி அவற்றை கையாளுவதற்கு முன்னும் பின்னும் கை கால்களை நன்றாக கழுவ வேண்டும். அவற்றை எவ்வாறு பராமரிப்பது என்பதை அரசு வழிகாட்டுதல் படி கடைபிடிக்க வேண்டும். இது குறித்து விலங்கு ஆரோக்கிய உலக அமைப்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆசியா போன்ற பகுதிகளிலும் செல்லப்பிராணிகளுக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையில் கொரோனா தொற்று பரவுகின்றது’ என்று தெரிவித்துள்ளார்.