தமிழகத்தில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெறுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. இந்திய தேர்தல் ஆணையம் கடந்த நவம்பர் 1ஆம் தேதி வெளியிட்டுள்ள,தமிழக சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தற்போது வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. வாக்காளர்களின் பெயர்கள் விடுபடாமல் சேர்க்கப்படும்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் திருத்தம், பெயர் சேர்க்கை,முகவரி மாற்றம் செய்ய விரும்புவோர் வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது இணையதளம் https://www.nvsp.in மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் வருவாய் கோட்டாட்சியர் அல்லது வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.