Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களுக்கு அன்பான வேண்டுகோள்…. யாரும் இந்த வழியா போகாதீங்க…. மாநகராட்சி அறிவிப்பு….!!!!

வடகிழக்கு பருவமழையின் காரணமாக சென்னையில் தொடர்ந்து அதிக கனமழை பெய்து வருகிறது.கனமழையின் காரணமாக சென்னையில் உள்ள 11 சுரங்கப்பாதைகள் மழைநீரால் மூழ்கியுள்ளது.மக்கள் யாரும் தேவை இல்லாமல் வெளியே வரவேண்டாம் என்று மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை மாநகர் முழுவதும் மழை நீர் தேங்கியுள்ளதால் சென்னை மக்கள் கடந்த 4 நாட்களாக அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவுவதற்காக பேரிடர் மீட்பு குழுவினர் களத்தில் இறங்கியுள்ளனர்.இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாமல்லபுரம் நோக்கி நகர்ந்து வருவதால் சென்னை மாநகரில் நேற்று மாலை முதல் அதிகரணம் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அதன் காரணமாக 11 சுரங்கப்பாதைகள் மழை நீரில் மூழ்கியுள்ளது.

சென்னையில் சில சுரங்க பாதைகளில் நீர் அதிக அளவில் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சுரங்க பாதைகளின் வழியே செல்வதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 044-25619204, 044-25619206, 044-25619207, 044-25629208, 044-25303870 ஆகிய எண்களிலும் 9445477205, 94445025819, 9445025820 ஆகிய வாட்ஸ்அப் எண்களிலும் புகார் தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Categories

Tech |