Categories
மாவட்ட செய்திகள்

வழக்கை திரும்ப பெற வற்புறுத்தும்…. வனச்சரகர் மீது நடவடிக்கை… ஆதிவாசி மக்கள் மனு..!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட மெச்சிக்கொல்லி மற்றும் பேபி நகர்  ஆகிய பகுதியில் ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் நேற்று முன்தினம் காலை 10.30 மணிக்கு கூடலூர் ஆர்டிஓ அலுவகத்தில்  புகார் ஒன்றை அளித்துள்ளனர். இந்த புகாரில் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள புலியளாம் கிராமத்தில் வசித்து வரும் எங்களுக்கு  குடியமர்வு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 லட்சம் வழங்குவதாக கூறினர். அதன் முதல் கட்டமாக ரூ.7,00,000 வங்கி மூலம் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த பணத்தை கொண்டு பட்டா இல்லாத அரசு நிலத்தை வாங்கி வனத்துறையினர் எங்களிடம் ஒப்படைத்து ஏமாற்றி விட்டனர்.

இதுகுறித்து ஊட்டியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் கடந்த 2009ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்படி பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில் எங்களுக்கு ரூ.3,00,000 டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்த பணத்தை கூடலூரில் உள்ள வங்கியில் இருந்து எடுப்பதற்காக கடந்த அக்டோபர் 28ஆம் தேதி சென்றபோது முதுமலை வனச்சரகரிடம் முறையான கடிதம் வாங்கிக் கொண்டு வந்தால்  பணம் வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.

அதனைதொடர்ந்து முதுமலை வனச்சரகர் மனோகரிடம் சென்று கடிதம் கேட்டபோது, வனத்துறையினர் மற்றும் மற்றவர்கள் மீது போட்டுள்ள வழக்கை திரும்ப பெற்றால் மட்டுமே ரூ.3,00,000 கிடைக்கும் என்று கூறினார்.எனவே வங்கியில் வைக்கப்பட்டுள்ள ரூ.3,00,000 எங்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட வனச்சரகர் மனோகரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து வனச்சரகர் மனோகரிடம் கேட்டதற்கு, “வங்கியில் வைப்புத் தொகையாக வைக்கப்பட்டுள்ள பணத்தை எடுத்து தர வேண்டும் என்று 16 ஆதிவாசி குடும்பத்தினர் கேட்டனர். அப்போது ஆர்.டி.ஓ. தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் ஒப்புதல் பெற்று பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தேன். மேலும் ஆதிவாசிகள் மக்கள் வசிக்கும் இடம் அரசு நிலம் என்பதால் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் தற்போது தான் பணியிட மாறி வந்துள்ளேன். எனவே எனக்கும் முறைகேடு வழக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் நான் ஏன் ஆதிவாசி மக்களிடம் பணம் தரமுடியாது என்று கூறுவேன். மேலும் இரண்டு குடும்பத்தினருக்கு பணம் வழங்கப்பட்டு மற்றும் மற்ற குடும்பங்களுக்கு பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்”என்று அவர் கூறினார்.

Categories

Tech |