மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் முக ஸ்டாலின் 2 நாட்கள் ஆய்வு செய்கிறார்..
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதன் காரணமாக சென்னை உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் சாலைகள், தெருக்களில் மழைநீர் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.. மேலும் மழைநீர் வீடுகளுக்குள்ளும் புகுந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. இதற்கிடையே தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
முதல்வர் முக.ஸ்டாலின் சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, நிவாரணப்பொருட்களை வழங்கினார்.. இந்த கனமழையால் கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது.. தொடர்ந்து பெய்யும் கனமழையால் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால், அவர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்..
இந்த நிலையில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய இன்று மாலை கடலூர் செல்கிறார் முதல்வர் முக ஸ்டாலின்.. டெல்டா மாவட்டங்களில் விளைநிலங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி 2 நாள் ஆய்வு செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்..