சென்னையில் 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதாலும் அதிக கனமழை பெய்யும் என்பதாலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.நேற்று வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கே சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.அது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா கடற்பகுதிக்கு வடதமிழகம் பகுதிக்கும் இடையில் சென்னைக்கு அருகே இன்று மாலை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சென்னையில் அதிக காற்று மற்றும் அதிக கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.