தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. அது மட்டுமல்லாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்த இன்று மாலை சென்னையில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதனால் நேற்று மாலை முதலே தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாட்கள் ஆய்வு செய்ய இருக்கிறார். அதன் ஒரு பகுதியாக இன்று மாலை கடலூர் செல்கிறார். தற்போது பருவ மழையால் எந்தெந்த பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது அதற்கான நிவாரண பணிகள் குறித்து ஆலோசனைகளை நடத்தி வருகின்றார்.