காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற இருந்த நிலையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள உக்கரம் பகுதியில் வெங்கடாசலபதி-பானுமதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு கிரண்ராஜ் கிஷோர் என்ற மகன் இருந்தார். இவர் டிப்ளமோ படித்துள்ளார். இவரும் பக்கத்து தெருவை சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கிரண்ராஜ் கிஷோர் காதலித்த பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கிரண்ராஜ் கிஷோர் மனமுடைந்து காணப்பட்டார்.
இந்நிலையில் காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற இருந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கிரண்ராஜ் கிஷோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் கிரண்ராஜ் கிஷோரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கிரண்ராஜ் கிஷோர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.