கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை இடைவிடாமல் பெய்து வருகிறது.. குறிப்பாக சென்னை உட்பட சில மாவட்டங்களில் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய கனமழை தற்போது வரை நீடித்து வருகிறது.. இதனால் ஆங்காங்கே பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.. வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.. மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது.. பல்வேறு பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் மக்கள் அனைவரும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்..
இந்நிலையில் சென்னையில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.. சென்னையை தொடர்ந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.. மழை நீர் தேங்கி உள்ளதன் காரணமாக 3 மாவட்டத்திலுள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (12.11.21) விடுமுறை அளித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்..