தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றன. பெரும்பாலான ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் புழல் ஏரியின் மொத்த உயரம் 21.20 அடியும், 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாகும். தற்போதைய நிலையில் ஏரியில் 20 அடி நீர் இருப்பு உள்ளது.
மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் யில் இருந்து 3000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதனால் 10 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சாமியார் மடம், தண்டல் கலனி, வடகரை, கிரான்ட் லைன், பாபா நகர், வடபெரும்பாக்கம்,மணலி மற்றும் கோசப்பூர் உள்ளிட்ட இடங்களில் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.