Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நவம்பர் 17 முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு திடீர் உத்தரவு….!!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டுவருகின்ற நவம்பர் 17ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்று ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த வந்ததையடுத்து மூடப்பட்ட டாஸ்மாக் மது கடைகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டன. தீபாவளி அன்று மது விற்பனை படுஜோராக நடந்தது.இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகின்ற நவம்பர் 17ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடும்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும்.இந்த திருவிழாவுக்கான கொடியேற்றம் நேற்று நடைபெற்ற நிலையில் வருகின்ற நவம்பர் 19ஆம் தேதி மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. அந்தஅந்த நாட்களில் மாநிலம் முழுவதும் இருந்து அண்ணாமலையார் கோவிலுக்கு அதிக அளவு பக்தர்கள் வருவதால் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் வருகிற 17-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |