Categories
மாநில செய்திகள்

மக்களே வெளியே வரவேண்டாம்…. 45 கி.மீ வேகத்தில் காற்று…. வானிலை மையம் எச்சரிக்கை….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டை விட அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளது என்று முன்னதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளில் இருந்து தமிழகத்தில் அதீத கன மழை வருகிறது. தற்போது வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதினால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனைத் தொடர்ந்து வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இந்நிலையில் வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னை அருகில் உள்ள கடற் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே இதனால் கிழக்கு கடற்கரை சாலை வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் சென்னையில் 40 முதல் 45 கி.மீ வேகத்தில் காற்று அதிகரிக்க கூடும்  என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே பொது மக்கள் வெளியே வரவேண்டாம் என்று மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் சென்னையில் பெய்து வரும் மழை அதிகபட்சமாக எண்ணூரில் 17.5 செ.மீ, நுங்கம்பாக்கத்தில் 14 செ.மீ மற்றும் எம்.ஆர்.சி நகரில் மழை பதிவாகியுள்ளது.

Categories

Tech |