Categories
மாநில செய்திகள்

BREAKING: சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. அதுமட்டுமில்லாமல் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தாழ்வு மண்டலமாக மாறி சென்னை அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வட மேற்கு திசையில் நகர்ந்து காரைக்காலுக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் அண்ணா நகர், மாம்பலம், ஈக்காட்டுதாங்கல், கிண்டி, வேளச்சேரி , சாலிகிராமம், அம்பத்தூர், சூளைமேடு, தரமணி, மயிலாப்பூர், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |