Categories
மாநில செய்திகள்

BREAKING: இந்த 4 மாவட்டங்களில்… 40 – 45 கி. மீ வேகத்தில் காற்று வீசும்… வானிலை ஆய்வு மையம்…!!!

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தரைக்காற்று 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னை கிழக்கு தென் கிழக்கே சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர். காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று அதிக மழை பெய்யும்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா – வட தமிழக கடற்கரை பகுதிகளுக்கு இடையே சென்னைக்கு அருகே இன்று மாலை கரையைக் கடக்கும்.இதனால் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தரைக்காற்று 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் வட தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |