சேலம் மாவட்டம் திருமலைகிரி அருகில் உள்ள முருங்கபட்டியில் பச்சை முத்து(96) என்பவர் வசித்துவருகிறார். இவருடைய மகன் வனசெழியன் அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிகிறார். குடிசை வீட்டில் பச்சமுத்து வசித்து வருகிறார். பச்சமுத்துக்கு வயது முதிர்வு காரணமாக கட்டிலில் படுத்த படுக்கையாக இருந்தார். இந்நிலையில் திடீரென பச்சைமுத்து குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்து வந்த வனசெழியன் பதறி அடித்து தனது தந்தையை காப்பாற்ற வேண்டும் என்று எரிந்த குடிசை வீட்டுக்குள் நுழைந்தார்.
அப்போது கட்டிலில் படுத்திருந்த தனது தந்தையை கைகளில் தூக்கிக்கொண்டு வெளியே வந்தபோது இருவரும் தீயில் கருகினார்கள். இதையடுத்து பலத்த காயமடைந்த இருவரையும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது. அதில் சிகிச்சை பலனின்றி பச்சைமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வனசெழியன் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து இரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்