Categories
மாவட்ட செய்திகள்

குப்பனூர் மலை பாதையில் போக்குவரத்து அனுமதி… 30கி.மீ செல்ல வேண்டும்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 4ஆம் தேதியன்று அதிக கனமழை பெய்தது. இதனால் குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் அந்த வழியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதையடுத்து மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள மண்சரிவு சீரமைப்பு பணிகள் கடந்த 7ஆம் தேதி நிறைவடைந்துள்ளது.

ஆனால் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கிடையில் சேலம் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சிவசண்முகராஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆகியோர்கள் மண்சரிவு சரி செய்யப்பட்ட குன்னூர் மலைப்பாதையில் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து கண்காணிப்பு அதிகாரி சண்முகராஜா மற்றும் கலெக்டர் கார்மேகம் ஆகியோர்கள் ஏற்காடு படகு இல்லம் தூர்வாரும் பணியை நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்நிலையில் ஏற்காடு குப்பனூர் மலைப்பாதையில் கனரக வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்தச் சாலையில் வாகனங்கள் 30கி.மீ வேகத்தில் தான் செல்ல வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |