அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியை 9 லட்சம் சிறுவர்களுக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி 5 முதல் 11 வயது வரையிலான சிறுவர்கள் 9 லட்சம் பேருக்கு ஒரு வாரத்திற்குள் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த 2-ஆம் தேதி மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு 5 முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கியது.
இதற்கிடையே நாடு முழுவதும் பைசர் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி 20 ஆயிரம் மருந்தகங்கள், மருத்துவர்களின் அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சிறுவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிகாரிகள் அந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்ள நாட்டில் உள்ள 2.8 சிறுவர்கள் தகுதி உடையவர்களாக இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.