Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இவர்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தரகோரி…. பா.ம.க. சார்பாக போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தரகோரி பா.ம.க. சார்பாக போராட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுத்தர தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய வலியுறுத்தி பா.ம.க. சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டம் மாவட்ட அமைப்பு செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. அதில் தெற்கு மாவட்ட செயலாளரான ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். அப்போது மாநில பொதுக்குழு உறுப்பினர் தனபாலன் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அந்த போராட்டம் வன்னியர்களுக்கு உரிய 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுத் தர வேண்டும் என்றும் இது தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் அந்த போராட்டத்தில் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன், பா.ம.க மாவட்ட துணைச் செயலாளர் ஜீவானந்தம், ஒன்றிய செயலாளர் வினோத், மன்னார்குடி நகர துணை செயலாளர் கருணாநிதி, நகர இளைஞரணி தலைவர் வசந்த், வன்னியர் நகர செயலாளர் அரவிந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |