சென்னை அசோக்நகர், எம்ஜிஆர் நகர் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் உட்பட பலருக்கு சகஜமாக கஞ்சா கிடைப்பதாக காவல் துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தபடி இருந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, எம்ஜிஆர் நகர், அசோக்நகர் பகுதிகளில் சிலர் கஞ்சா விற்பனை செய்து வருவது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, தர்ஷன், குமார், கவுதமன், கோதண்டன், ராஜேஸ்வரி, நாகம்மாள், லட்சுமி உள்ளிட்ட ஏழு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் சோதனையிட்டதில் 11 கிலோ கஞ்சா மற்றும் ரூ. 65 ஆயிரம் பணம் உள்ளிட்டவற்றையும் எம்ஜிஆர் நகர் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.